Uncategorized

உயிரிழந்த நீலா சிங்கத்துக்கு மற்றொரு வைரஸ் பாதிப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்!

2views

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த நிலா சிங்கத்துக்கு மற்றொரு வைரஸ் பாதிப்பு இருந்ததை இந்திய கால்நடை ஆராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்துள்ளது.


உயிரிழந்த நீலா சிங்கத்துக்கு மற்றொரு வைரஸ் பாதிப்பு... வெளியான அதிர்ச்சி தகவல்!

நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் கொரோனா வைரஸ் விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. சென்னை அருகே வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அதில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிழந்ததாகவும் பூங்கா நிர்வாகம் அறிவித்தது.

உயிரிழந்த நீலா சிங்கத்துக்கு மற்றொரு வைரஸ் பாதிப்பு... வெளியான அதிர்ச்சி தகவல்!

பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டதில், 9 சிங்கங்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. 2 சிங்கங்களின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், நீலா சிங்கம் கொரோனாவால் உயிரிழந்தது. இதனால், சிங்கங்களை ஊழியர்கள் தனிமைப்படுத்தினர். மற்ற விலங்குகளையும் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்த நீலா சிங்கத்துக்கு மற்றொரு வைரஸ் பாதிப்பு... வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில், கொரோனா வைரஸால் உயிரிழந்த நீலா சிங்கத்திற்கு Canine Distemper என்னும் மற்றொரு வைரஸ் பாதிப்பு இருந்ததாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகம் அறிவித்துள்ளது. நீலா சிங்கத்தை தவிர மற்றொரு சிங்கத்திற்கும் இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடிய வகை வைரஸ்களில் இருந்து விலங்குகளை காக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Response