Uncategorized

கொரோனாவால் மலர்ந்த காதல்; 20 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி ஈன்ற வண்டலூர் மனித குரங்கு கவுரி

4views

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிம்பன்சி எனப்படும் மனித குரங்கு 20 ஆண்டுகளுக்கு பின்னர் குட்டியை ஈன்றது.


கொரோனாவால் மலர்ந்த காதல்; 20 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி ஈன்ற வண்டலூர் மனித குரங்கு கவுரி
கொரோனாவால் மலர்ந்த காதல்; 20 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி ஈன்ற வண்டலூர் மனித குரங்கு கவுரி

சிங்கப்பூரில் இருந்து ஆண், பெண் என இரண்டு மனித குரங்குகள் வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. கவுரி -கோம்பி என்று பெயரிடப்பட்டன. வண்டலூர் பூங்காவிற்கு செல்லும் பார்வையாளர்கள் கண்களில் முதலில் படுவது இந்த மனித குரங்குகள்தான். இந்த மனித குரங்குகளுக்கு என ஒரு செயற்கை குகை உருவாக்கி வைத்துள்ளது பூங்கா நிர்வாகம்.

இந்த குரங்குகளின் சேட்டைகளைத்தான் மக்கள் அதிகம் கண்டு ரசிப்பார்கள். தர்பூசணி, லஸ்ஸிதான் இந்த குரங்குகளுக்கு அதிகம் பிடித்தமான உணவு. ஆரஞ்சு, வாழைப்பழம், கொய்யா உள்ளிட்ட பழங்களையும் இக்குரங்களுக்கு உணவாக தினமும் வழங்கி வருகிறது பூங்கா நிர்வாகம்.

கொரோனாவால் மலர்ந்த காதல்; 20 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி ஈன்ற வண்டலூர் மனித குரங்கு கவுரி

கவுரி -கோம்பி மனித குரங்குகளை இனவிருத்தி அடையச்செய்ய பூங்கா விலங்குகள் பராமரிப்பாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்காமல் இருந்தது. கொரோனாவின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 17ம்தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரைக்கும் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த காலத்தில் ஆள் நடமாட்டம் இல்லாமல் பூங்காவில் அமைதியான சூழல் அமைந்தது. இதனால், கவுரி -கோம்பிக்கு காதல் மலர்ந்தது. காதலின் உச்சத்தில் இணைசேர்ந்தது.

கொரோனாவால் மலர்ந்த காதல்; 20 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி ஈன்ற வண்டலூர் மனித குரங்கு கவுரி

240 நாள் கர்ப்ப காலம் முடிந்து சில தினங்களுக்கு முன்னர் குட்டியை ஈன்றது கவுரி. 20 ஆண்டுகளுக்கு பின்னர் மனித குரங்கு குட்டியை ஈன்றதால், பூங்கா மருத்துவர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் மனித குரங்குகளை அதிக கவனம் எடுத்து பாதுகாத்து வருவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Response