Uncategorized

பேரறிவாளன் விடுதலை… அற்புதம்மாளுக்காக குரலெழுப்பும் கார்த்திக் சுப்புராஜ்!

2views

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகளும் சினிமா பிரபலங்களும் வலியுறுத்தி வருகிறார்கள். எழுவர் விடுதலை குறித்து சிபிஐ விசாரணைக் குழு ஆட்சேபனை இல்லை என தெரிவித்து விட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்து விட்டார். இதனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.


பேரறிவாளன் விடுதலை... அற்புதம்மாளுக்காக குரலெழுப்பும் கார்த்திக் சுப்புராஜ்!
பேரறிவாளன் விடுதலை... அற்புதம்மாளுக்காக குரலெழுப்பும் கார்த்திக் சுப்புராஜ்!

இந்த நிலையில், பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு அவரது தாயார் அற்புதம்மாள் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், எனது மகன் குற்றவாளி இல்லை என ஐபிஎஸ் அதிகாரி தியாகராஜன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அவனுக்கு சிறுநீரக பிரச்னை இருப்பதால் தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. வாழ்வின் பெரும்பகுதியை சிறையில் கடத்திவிட்டான். எனவே, அவனை விடுதலை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

பேரறிவாளன் விடுதலை... அற்புதம்மாளுக்காக குரலெழுப்பும் கார்த்திக் சுப்புராஜ்!

அற்புதம்மாள் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், 30 ஆண்டு காலமாக போராடும் தாய்க்கு நீதி கிடைப்பதற்கு மிக நீண்ட காலம் என குறிப்பிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் மட்டுமல்லாது பல சினிமா பிரபலங்கள் பேரறிவாளன் விடுதலைக்காக குரலெழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response